“விஜய்யின் இலையில் வைக்கப்பட்ட எக்ஸ்ட்ரா ஸ்வீட் தான் அதிமுக” – கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
மதுரை: தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ் எம்பி Karti Chidambaram, அதிமுக குறித்து கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். “விஜய்யின் இலையில் வைக்கப்பட்ட எக்ஸ்ட்ரா ஸ்வீட் தான் அதிமுக” என்று அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அவசியமில்லை என்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “விஜய் கேட்காமலேயே அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என்னை பொருத்தவரை அதிமுக இல்லாமலேயே 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த முடியும். அவர்களை அரசாங்கத்தில் சேர்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. விஜய் முதலில் ஆதரவு அளித்த கட்சிகளை வைத்து ஆட்சியை நடத்தலாம்” என்றார்.
மேலும், “தமிழக வெற்றிக்கழகத்தை தவிர்த்து வைத்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மக்கள் புதிய ஆட்சியை விரும்பியே வாக்களித்துள்ளனர். இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் எண்ணம்” என்றும் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் பரஸ்பர மரியாதையுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து நன்றி தெரிவிப்பது இயல்பான ஒன்று என்றும், கேட்காத ஆதரவு வந்தாலும் யாரும் அதை மறுக்க மாட்டார்கள் என்றும் கார்த்தி குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், “அதிமுக நிபந்தனைகள் விதித்தால் அவர்களின் ஆதரவும் தேவையில்லை; ஆட்சியில் பங்கும் கொடுக்க வேண்டியதில்லை. விஜய் தலைமையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி நடத்த முடியும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “யாராவது ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று கூறினாலும் அதற்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை. விஜய்க்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்றும் அவர் கூறினார்.
