தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும், அவரது அமைச்சரவையினருக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு கட்சி, பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை ஆளவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சீமான் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
