சென்னை: இணைய வழியில் இன்று மாலை 5 மணிக்கு விசிக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், விசிக நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகே யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
இன்று மாலை நடைபெறும் உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, நாளை காலை கட்சியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திமுக-அதிமுக கூட்டணி குறித்தும் கட்சியின் நிர்வாகிகளின் கருத்து கேட்கப்பட உள்ளதாக கூறிய திருமாவளவன், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்து விசிக இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றார்.
