சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான பீயூஷ் கோயல், திமுக-காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கோரி அவர் சமூக வலைதளங்களில் 29 வினாடிகள் கொண்ட ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு, மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் போன்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, தமிழகத்தை சீரழித்ததாக திமுக-காங்கிரஸ் கூட்டணியை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாற்றத்திற்கான வழிகாட்டியாக தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
