வேலூர்: காட்பாடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் Durai Murugan, எமகண்டம் முடிந்த பிறகே வேட்புமனு தாக்கல் செய்தார்.
11வது முறையாக தேர்தலில் போட்டியிடும் அவர், நேற்று காலை 11:40 மணியளவில் காட்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது பகல் 12:00 மணி வரை எமகண்டம் காலமாக இருப்பதால், நல்ல நேரம் கிடையாது எனக் கருதி, வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் காத்திருந்தார்.
பின்னர், எமகண்டம் முடிந்ததும் 12:00 மணிக்கு பிறகு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
