புதுச்சேரி: த.வெ.க. தொடங்கிய பின், புதுச்சேரிக்கு விஜய் குறைந்த அளவிலேயே வருகை தந்திருந்தாலும், அங்கு ஆளும் அரசை நேரடியாக விமர்சிக்காமல் இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரி வந்த விஜய் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதிலும், அப்போது கூட அவர் என். ரங்கசாமி தலைமையிலான அரசை நேரடியாக விமர்சிக்கவில்லை. ரேஷன் கடை தொடர்பான பிரச்சினையை மட்டும் எடுத்துரைத்தார்.
ரங்கசாமியுடன் தனிப்பட்ட நெருக்கம் இருப்பதால், அவரை குறிவைத்து விமர்சனம் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்திலும் ரங்கசாமி பெயரை கூட விஜய் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் விஜய், ரங்கசாமி குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், புதுச்சேரியில் ஆளும் அரசை விமர்சிக்காமல் இருப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதனால், ஆளும் அரசை விமர்சிக்காமல் எவ்வாறு மக்களிடம் வாக்கு கேட்க முடியும் என்று புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
