திப்ருகர்: அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரசாரத்துக்காக அசாம் சென்ற பிரதமர் Narendra Modi, திப்ருகர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் பெண்களுடன் கலந்துரையாடினார்.
அந்த நேரத்தில், தேயிலை பறிக்கும் பணியில் பெண்களுடன் இணைந்து சிறிது நேரம் அவர் தேயிலை பறித்ததும் கவனம் ஈர்த்தது. இயற்கை எழில் சூழ்ந்த தோட்டத்தில் பெண்களுடன் அவர் உரையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த பிரதமர் மோடி, “தேயிலை என்பது அசாம் மாநிலத்தின் ஆன்மா. இங்கு உற்பத்தியாகும் தேயிலை உலகம் முழுவதும் பயணிக்கிறது. திப்ருகர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுடன் சந்தித்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம்,” என தெரிவித்துள்ளார்.
