காரைக்குடி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனுமதி பெறாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில், அரசியல் தலைவர்களின் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, துணை முதல்வர் Udhayanidhi Stalin மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலர் Edappadi K. Palaniswami ஆகியோரின் வாகனங்களும் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், மார்ச் 29ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சோதனைச்சாவடியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் Seeman பயணித்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து சோதனை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரி சுப்புலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், “மற்ற தலைவர்களின் வாகனங்களையும் ஒரே முறையில் சோதனை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
