ஈரான் அனுமதியுடன், மேலும் 2 இந்திய கப்பல்கள் எல்பிஜி ஏற்றிச் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி கடந்து இந்தியாவை நோக்கி பயணம் செய்து வருகின்றன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர்நிலை காரணமாக, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரான் தவிர, பிற நாடுகளில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஈரான் அனுமதியுடன் மேலும் 2 இந்திய கப்பல்கள் எல்பிஜி ஏற்றிச் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இக்கப்பல்களின் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படையின் கப்பல்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக ஜக் வசந்த், நந்தா தேவி, சிவாலிக் ஆகிய கப்பல்கள் இந்தியா வந்தடைந்த நிலையில், தற்போது BW ELM மற்றும் BW TYR ஆகிய கப்பல்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன.
கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பல கப்பல்கள் இன்னும் அனுமதிக்காக காத்திருக்கின்றன என்று கடற்படை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
