புதுடில்லி: புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் தேஜ கூட்டணி அரசு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபைக்கு வரும் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜ மற்றும் அதிமுக இணைந்து கூட்டணியாக போட்டியிடுகின்றன.
தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தேஜ கூட்டணி அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும், அதனால் மீண்டும் மக்கள் இந்த கூட்டணியையே தேர்வு செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி” என்ற நிகழ்ச்சியில் மார்ச் 30 மாலை 5:30 மணிக்கு பங்கேற்க ஆவலுடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
