டெஹ்ரான்: யுஏஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்காக ஈரான் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது.
அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், துபாயில் இன்று காலை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதலில் ஈரான் ஈடுபட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த சூழ்நிலையில், யுஏஇ, சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அண்டை நாடுகளில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான பதிலடி வழங்கப்படும். ஆனால் மற்றபடி அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்.
இதற்கான ஒப்புதலை இடைக்கால தலைமை கவுன்சில் வழங்கியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
