புதுடில்லி: ராஜ்யசபாவில் காலியாகும் உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் பீஹார் மாநிலத்தில் இருந்து பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின் போட்டியிடுகிறார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக உள்ள நிதின் நபின், சில மாதங்களுக்கு முன்பு பாஜ கட்சியின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நாடு முழுவதும் காலியாக உள்ள 37 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜ கட்சி வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில், பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின் பீஹார் மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார்.
மேலும் பாஜ வெளியிட்ட 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்:
-
நிதின் நபின் – பீஹார்
-
சிவேஷ் குமார் – பீஹார்
-
தரேஷ் கோவாலா – அசாம்
-
ஜோகென் மோகன் – அசாம்
-
லட்சுமி வர்மா – சத்தீஸ்கர்
-
சஞ்சய் பாட்டியா – ஹரியானா
-
மன்மோகன் சமல் – ஒடிஷா
-
சுஜித் குமார் – ஒடிஷா
-
ராகுல் சின்ஹா – மேற்கு வங்கம்
இவர்கள் அனைவரும் வரும் ராஜ்யசபா தேர்தலில் பாஜ கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.
