தஞ்சாவூர்: அரசியலுக்கு புதியதாக வந்தவர்களை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நிருபர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டார். கட்சியின் அங்கீகாரம் தொடர்பான நிலைமையை முன்கூட்டியே உணர்ந்ததால் தான் தனி சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்ததாகவும் கூறினார்.
இந்த முடிவின் மூலம் கட்சியை பாதுகாக்க முடிந்ததாக தெரிவித்த அவர், இதற்கான முக்கிய காரணம் துரை வைகோ என பாராட்டினார். தேர்தல் காலங்களில் தாம் உதவி செய்த சிலர் பின்னர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும், தன்னை குறிவைத்து அவதூறு பரப்பியதாகவும் குற்றம்சாட்டினார்.
மதிமுகவை யாராலும் பாதிக்க முடியாது என்றும், கட்சி தொடர்ந்து வலுவாக செயல்படும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலுக்கு புதியதாக வந்தவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை” என தெரிவித்தார்.
