717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது சிறந்த முடிவு: ஐகோர்ட் பாராட்டு
சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் அரசின் உத்தரவு சிறந்த முடிவு என Madras High Court பாராட்டு தெரிவித்துள்ளது.
கல்வி நிலையங்கள், மதவழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகளை மூடுமாறு தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை மண்டலத்தில் 99, கோவை மண்டலத்தில் 173, மதுரை மண்டலத்தில் 281, சேலம் மண்டலத்தில் 80 மற்றும் திருச்சி மண்டலத்தில் 84 என மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
முதல்வர் Vijay உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இந்த நடவடிக்கையை செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
திமுக ஆட்சிக் காலத்தில், டாஸ்மாக் கடை நடத்துவதற்காக தங்கள் நிலத்தை குத்தகைக்கு வழங்கியிருந்த இரண்டு நில உரிமையாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களின் தரப்பில், டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் முடிவை கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் Vijay Narayan, நில உரிமையாளர்கள் டாஸ்மாக் நிறுவனத்திடம் செலுத்தியிருந்த வைப்புத் தொகைகள் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி G. R. Swaminathan, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் தனது உத்தரவில், “கல்வி நிலையங்கள், மதவழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள 717 மதுக்கடைகளை மூடும் அரசின் முடிவு சிறந்த ஒன்று” என்று குறிப்பிட்டார்.
“முதல்வரின் உத்தரவை டாஸ்மாக் நிறுவனம் பின்பற்ற முடிவு செய்துள்ள நிலையில், ரிட் மனு மூலம் அதனை கேள்வி எழுப்ப முடியாது,” என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
