40 ஆயிரம் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க அனுமதி
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக எடுத்துச் செல்ல முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 40,000 ஏரிகள் மற்றும் குளங்கள், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, இந்த நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக தேவைப்படும் பொதுமக்கள் ஆகியோர், இந்த மண்ணை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரித்து, மழைநீர் சேமிப்பு திறன் மேம்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த், நிதி அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட அரசிதழில் வெளியிட மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திட்டத்தை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் தாசில்தார்களால் அனுமதி வழங்கப்படும் என்றும், அதிகாரிகளின் மேற்பார்வையில் உரிமக் கட்டணம் இல்லாமல் மண்ணை எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
