Indian Premier League 2026 தொடரில் Punjab Kings அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
29-ஆவது லீக் போட்டியில் Lucknow Super Giants அணியை வீழ்த்திய பஞ்சாப், இந்த தொடரில் முதல் 6 போட்டிகளிலும் தோல்வியறியாமல் சாதனை படைத்துள்ளது. IPL வரலாற்றில் முதல் 6 போட்டிகளில் தோல்வி சந்திக்காத முதல் அணியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 254 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும்.
அதனைத் தொடர்ந்து விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்ததால், பஞ்சாப் அணி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
முன்னதாக, 2014-ல் பஞ்சாப் மற்றும் 2013-ல் Kolkata Knight Riders அணிகள் முதல் 5 போட்டிகளில் தோல்வி இன்றி இருந்த சாதனையை, தற்போது பஞ்சாப் முறியடித்துள்ளது.
மேலும், Mumbai Indians அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் அதிக வெற்றிகள் பெற்ற அணியாகவும் பஞ்சாப் உயர்ந்துள்ளது.
அதோடு, மும்பைக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணிகளில் Chennai Super Kings அணியின் சாதனையையும் பஞ்சாப் சமன் செய்துள்ளது.
