ராமநாதபுரம்: தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கப்பட்ட வேல் பரிசை வாங்க மறுத்து திருப்பி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் வழங்கப்பட்ட புத்தர் சிலையை ஏற்றுக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் ஓட்டு சேகரித்தார். உரையாற்றி முடித்த பின், கட்சி நிர்வாகிகள் அவருக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.
அதில் ஒருவர் வழங்கிய வேலை அவர் பெற்றுக் கொண்டு உடனே திருப்பி வழங்கினார். அதற்கு அடுத்ததாக மற்றொருவர் வழங்கிய புத்தர் சிலையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே ஆச்சரியத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வந்தபோது, அச்சுந்தன்வயல் சோதனை சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
