மதுரை: தவெக மற்றும் நடிகர் Vijay குறித்து எந்தவிதமான விமர்சனமும் செய்ய மாட்டேன் என இயக்குனரும் தேஜ கூட்டணி வேட்பாளருமான Sundar C தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி நிருபர்களிடம் பேசியபோது, “இதுவரை பல பேட்டிகள் கொடுத்துள்ளேன். ஆனால் தற்போது அரசியல் களத்தில் இருந்து பேசுவது புதுமையான அனுபவமாக உள்ளது. மதுரை மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வெற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
மேலும், “இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் மதுரையில் தங்கியிருந்து மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பேன். திரைப்படத் துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அரசியலில் எனது அடுத்த கட்டம் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே இருக்கும்,” என தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து, “வன்முறை எந்த சூழலிலும் ஏற்க முடியாத ஒன்று. இதுபோன்ற நிகழ்வுகளே பொதுமக்கள் அரசியலுக்கு வர வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன,” என்றார்.
விஜய் குறித்து அவர் கூறியதாவது: “எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உள்ளது. என் குடும்பத்திலும் அவருடன் நெருக்கமான உறவு உள்ளது. எனவே அவரையோ, அவரது கட்சியையோ விமர்சிக்க நான் தயாராக இல்லை,” எனத் தெரிவித்தார்.
அதேவேளை, “மதுரை மத்திய தொகுதியில் போட்டி முக்கியமாக இரட்டை இலை மற்றும் உதய சூரியன் சின்னங்களுக்கு இடையே தான் உள்ளது. அவர்களுக்கு நான் ஆதரவு அளித்து பிரசாரம் செய்துள்ளேன். அவர்கள் எனக்காகவும் பிரசாரம் செய்ய வருவார்கள்,” என சுந்தர்.சி கூறினார்.
