கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் Trinamool Congress கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த பல உள்ளாட்சி கவுன்சிலர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் Bharatiya Janata Party 208 இடங்களில் வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து Suvendu Adhikari முதல்வராக பொறுப்பேற்றார். இதன் மூலம் Mamata Banerjee தலைமையிலான 15 ஆண்டுகால திரிணமுல் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்த தேர்தல் தோல்வியில் இருந்து மீள்வதற்குள், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாட்பாரா நகராட்சியில் உள்ள 35 கவுன்சிலர்களில் 30 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஹலிசார் நகராட்சியில் 23 பேரில் 16 பேர் பதவி விலகியுள்ளனர்.
மேலும், கருலியா, வடக்கு பராக்பூர் உள்ளிட்ட பல நகராட்சிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தொடர்ந்து பதவி விலகி வருவதாக கூறப்படுகிறது.
திரிணமுல் காங்கிரஸ் பொதுச்செயலரும், மம்தா பானர்ஜியின் அரசியல் வாரிசாக கருதப்படும் Abhishek Banerjee செல்வாக்கு அதிகம் உள்ள டைமண்ட் ஹார்பர் நகராட்சியிலும் 16 கவுன்சிலர்களில் 8 பேர் ராஜினாமா செய்திருப்பது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ஊழல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக சில உள்ளாட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜ அரசு மேற்கொண்டு வரும் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளால் அச்சமடைந்தே பலர் பதவி விலகுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நகராட்சி மற்றும் மாநகராட்சிகளை சீரமைப்பது என்ற நோக்கத்துடன் பாஜ அரசு செயல்பட்டு வருவதாகவும், இதன் விளைவாக திரிணமுல் கட்சியின் அடிமட்ட கட்டமைப்பு பலவீனமடைந்து வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
