கோல்கட்டா: மேற்குவங்கத்தில் மக்கள் எழுச்சி அதிகரித்து வருவதால், அங்கு பாஜ ஆட்சி உருவாகும்; பெரிய மாற்றம் நிகழும் என பிரதமர் Narendra Modi தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலம் ஹால்தியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மாநிலத்தில் ஆட்சியில் உள்ள All India Trinamool Congress அரசை மாற்ற மக்கள் ஆர்வமாக உள்ளனர். மக்கள் எழுச்சியை பார்க்கும் போது, மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சி மலரும் என்பது தெளிவாகிறது.
Mamata Banerjee தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது. நடைபெறும் இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; மாநிலத்தின் பெருமையை மீட்டெடுக்கும் தேர்தல் ஆகும்.
இந்தியா தற்போது அதிவேக வளர்ச்சி பாதையில் உள்ளது. ஆனால், மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி முன்னேற்றத்தை பாதிக்கிறது.
மம்தா ஆட்சியில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக மாநில மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஒருகாலத்தில் வேலைக்காக மக்கள் ஹால்தியாவிற்கு வந்த நிலையில், தற்போது அங்குள்ள இளைஞர்கள் அந்தமான், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை தேடி செல்கிறார்கள் என்றார்.
மேலும், போலி ஆவணங்கள் தயாரிப்பதில் திரிணமுல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆறு வாக்குறுதிகள்:
மேற்குவங்கத்திற்கு பாஜ அரசு வழங்கும் முக்கிய 6 வாக்குறுதிகள்:
- திரிணமுல் காங்கிரஸ் உருவாக்கிய அச்சத்தை நீக்கி, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கப்படும்
- ஆளுகையில் பொறுப்புடைமை உறுதி செய்யப்படும்
- பெண்களுக்கு எதிரான ஊழல் மற்றும் அநீதி தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும்
- ஊழலில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்
- அகதிகளுக்கு உரிமைகள் வழங்கப்படும்; சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும்
- 7வது ஊதியக் குழு சலுகைகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
