ஆமதாபாத்: ஐ.பி.எல். தொடரின் 25வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடக்கத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்ட குஜராத் அணி, பின்னர் டெல்லி மற்றும் லக்னோ அணிகளை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதிக்க அந்த அணி தீவிரமாக உள்ளது.
மறுபுறம், இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத ஒரே அணி கொல்கத்தா தான். 5 போட்டிகளில் 4 தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியதால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ள நிலையில், அதில் 3 முறை குஜராத் வென்றுள்ளது; கொல்கத்தா ஒரே முறை வெற்றி பெற்றுள்ளது.
இதனால், இன்றைய போட்டியில் கொல்கத்தா தனது முதல் வெற்றியைப் பெறுமா அல்லது குஜராத் தனது வெற்றிப் பயணத்தை தொடருமா என்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
