திருநெல்வேலி: சென்னையில் நடைபெற்ற த.வெ.க. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், முருகன் பக்திப் பாடலை நடிகர் **விஜய்**யை உருவகப்படுத்தி பாடியதாக, பாடகர் வேல்முருகன் மற்றும் கட்சியினர் மீது, இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், திருநெல்வேலி மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனிதமான பக்திப் பாடல், அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாடலை பயன்படுத்திய செயல், சமூக ஒற்றுமைக்கும், சட்டம்–ஒழுங்கிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக, திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
