புதுடில்லி: லோக்சபாவில், ராகுல் காந்தி பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அமளியில் ஈடுபட்டதுடன், மேஜை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்பிக்கள், இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது, ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவ தளபதி எழுதி வெளியிடப்படாத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை மேற்கோள் காட்டினார். இதற்கு ஆளுங்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, சீன ஊடுருவல் குறித்து ராகுலை பேசவிடவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், சில எம்பிக்கள் மேஜை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் இருக்கை நோக்கி காகிதங்களை வீசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங் உள்ளிட்ட 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ லோக்சபாவில் முன்வைத்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்
-
ஹிபி ஈடன்
-
கிரண் குமார் ரெட்டி
-
குர்ஜித் சிங் அயுக்லா
-
அமரிந்தர் சிங் ராஜா வாரிங்
-
மாணிக்கம் தாகூர்
-
பிரசாந்த் படோல்
-
தியோன் குரியாகோஸ்
-
சு.வெங்கடேசன்
போராட்டம்
சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, பார்லிமென்ட் வளாகத்தில், ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
