இஸ்லாமாபாத்தில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினரான பிலால் ஆரிப் சராபி, அவரது குடும்பத்தினரால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் இந்த பயங்கரவாத அமைப்பில் தளபதியாக இருந்த சராபி, முரித்கே பகுதியில் இளைஞர்களை சேர்த்து, பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகை தொழுகைக்கு பிறகு லஷ்கர் தலைமையகத்துக்கு வந்திருந்த அவரை, குடும்பத்தினரே சுற்றி வளைத்து கத்தியால் தாக்கினர்.
இந்த தாக்குதலில் சராபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலைக்கான காரணமாக குடும்ப தகராறு இருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
