சென்னை: தமிழில் பாடல்களை பாடி தேர்தல் பிரசாரம் செய்ய, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜ எம்.எல்.ஏ. Maithili Thakur தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாடகியான மைதிலி தாக்கூர், கடந்த ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் Bharatiya Janata Party சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் அவர் முன்பே கவனம் பெற்றவர். நடிகர் அஜித் நடித்த Viswasam படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடலை அவர் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும், கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் “அழகான பழனிமலை ஆண்டவா” போன்ற முருகன் பக்திப் பாடல்களை பாடியதும் பரவலாக பேசப்பட்டது.
சமீபத்தில், கேரளாவில் பாஜ வேட்பாளர்களுக்காக அவர் பிரசாரம் செய்தபோது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அவரை பிரசாரத்திற்கு பயன்படுத்த பாஜ நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜ போட்டியிடும் தொகுதிகளில், முருகன் பாடல்களை பாடி மக்களை ஈர்க்கும் வகையில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
