புதுடில்லி: தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் Vijay, மத்திய நிதியமைச்சர் Nirmala Sitharamanயிடம் வலியுறுத்தியுள்ளார்.
டில்லி பயணமாக சென்றுள்ள முதல்வர் விஜய், பிரதமர் Narendra Modiயை சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுவை வழங்கியதையடுத்து, பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்றும், ஓசூர், கோவை மற்றும் மதுரை நகரங்களில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
