சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு சட்டசபையில் 107 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில், தற்போது நான்கு தொகுதிகள் காலியாக உள்ளதால், 116 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பெரும்பான்மை நிரூபிக்க முடியும்.
இதனால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைக்கு முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலர் ராஜினாமா செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் இடைத்தேர்தல்களில் த.வெ.க வெற்றி பெற்றால் கட்சி தனிப்பெரும்பான்மையை எட்டும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை நோக்கி தமிழக வெற்றிக் கழக தலைமை அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
