Amit Shah, “மற்றொரு நபரின் மதநம்பிக்கையை கட்டாயமாக மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
New Delhiயில் நடைபெற்ற பழங்குடியின மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பழங்குடியின தலைவர் Birsa Mundaவின் 150வது பிறந்தநாள் ஆண்டை நினைவுகூர்ந்தார்.
அப்போது அவர், “Uniform Civil Code எனப்படும் பொது சிவில் சட்டம், பழங்குடியின மக்களை எந்த வகையிலும் பாதிக்காது. இது தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்,” என்றார்.
மேலும், “பாஜ ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போது, பழங்குடியின சமூகங்கள் அதன் வரம்பிற்கு வெளியே வைக்கப்படும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” என்றும் தெரிவித்தார்.
பழங்குடியின மக்களின் பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் பொது சிவில் சட்டம் தலையிடாது என அவர் உறுதியளித்தார்.
நக்சல் வன்முறையால் பல ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போது நாடு அந்த பிரச்னையிலிருந்து மெதுவாக மீண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், “பழங்குடி மக்களை மதமாற்றம் செய்ய ஆசைவார்த்தைகள் அல்லது தூண்டுதல்களை பயன்படுத்தக்கூடாது. மற்றொருவரின் மதநம்பிக்கையை கட்டாயத்தின் பேரில் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
