ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடப்பு சீசனில் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வந்தாலும், பந்துவீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி சிறந்த எகானமி கொண்ட அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி, கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்த சீசனிலும் சவாலான சூழ்நிலையில் இருக்கும் சிஎஸ்கே, தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க, மீதமுள்ள நான்கு போட்டிகளில் குறைந்தது மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
இந்நிலையில், பந்துவீச்சில் மட்டும் சிஎஸ்கே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 9.02 எகானமியுடன் இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு அணியாக சென்னை அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9.03 எகானமியுடன் இருக்கிறது.
அதேநேரத்தில், 10.69 எகானமியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் மே 10ஆம் தேதி லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2026 – சிறந்த எகானமி கொண்ட அணிகள்:
- சிஎஸ்கே – 9.02
- குஜராத் டைட்டன்ஸ் – 9.03
- கேகேஆர் – 9.23
- லக்னௌ – 9.26
- ஆர்சிபி – 9.29
- ராஜஸ்தான் – 9.59
- சன்ரைசர்ஸ் – 10.15
- பஞ்சாப் – 10.16
- தில்லி – 10.30
- மும்பை – 10.69
