பெங்களூரு: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிடம் தொலைநோக்குப் பார்வையும் தீர்வுகளும் உள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியாவின் சிந்தனை மற்றும் அணுகுமுறை பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடியது என்றார்.
மனிதகுலம் எதிர்நோக்கும் சவால்களை சமாளிப்பதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்றும், உலகிற்கு முழுமையான நலனையும் சமநிலையையும் வழங்குவதே இந்தியாவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிரினங்களின் நலனுக்காக இந்தியாவின் குரலை உலக நாடுகள் செவிமடுத்து கேட்க வேண்டும் என்றும், உலகளாவிய சவால்களை ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்வது காலத்தின் தேவையாகும் என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
