டெஹ்ரான்: ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வெடித்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிதா ஹெம்மாட்டி என்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும், அவருடன் தொடர்புடைய அவரது கணவர் முகமது ரேசா மஜித் அஸ்ல் மற்றும் அவர்களுடன் வசித்த பெரூஸ், கூரோஷ் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டங்களில் ஈடுபட்டதாக இதுவரை 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
