அலகாபாத்: காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான Rahul Gandhi மீது இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த Allahabad High Court உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு இந்தியாவுடன் கூடுதலாக பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமை இருப்பதாக 2019ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் ஆண்டறிக்கைகளில் அவர் பிரிட்டன் குடியுரிமையை குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முன்னதாக நிராகரிக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்த வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்ள கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில், ராகுலின் குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டில் முழுமையான விசாரணை அவசியம் எனக் கருத்து தெரிவித்தது.
அதன்படி, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், உத்தர பிரதேச போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேவையானால் இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
