Narendra Modiவின் அழைப்பை ஏற்று, Takako Takayachi மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் டகாயச்சியும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் இந்தியா–ஜப்பான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டிலும் ஜப்பான் பிரதமர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் இரு நாடுகளின் அமைச்சர்கள், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
