சென்னை: “முதல்வர் Vijay அவர்களின் செயல்பாடுகள் பிடித்துப் போனதால் பலரும் Tamilaga Vettri Kazhagam கட்சியில் இணைந்து வருகின்றனர்” என்று அமைச்சர் K. A. Sengottaiyan தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து விலகி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “அதற்கு காலம்தான் பதில் சொல்லும்” என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் எந்தவித குதிரை பேரமும் நடைபெறவில்லை என்றும், யார் குதிரை பேரம் நடத்தினர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
“தி.மு.க. ஆதரவுடன் முதல்வராக வருவேன் என்று கூறியவர்களிடமே இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும்” என்றும் செங்கோட்டையன் கூறினார்.
தாமும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகே தவெகவில் இணைந்ததாக குறிப்பிட்ட அவர், “ஐந்து ஆண்டுகள் அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து மட்டுமல்ல, ஒரே மாதத்தில் கூட சிலர் பதவியை ராஜினாமா செய்த சம்பவங்கள் உள்ளன. அது அவரவர் விருப்பம்” என்றார்.
“நான் யாரையும் அழைத்து வந்து கட்சியில் சேர்க்கவில்லை. அவர்கள் தாமாகவே வந்து சந்தித்து இணைந்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தன்னை விமர்சித்து வருபவர் ஒருவரை மறைமுகமாக விமர்சித்த அவர், “வயிற்று வலிக்காரரை கட்டிலை திருப்பி போட்டு படுக்க வைத்தால் வலி சரியாகாது; சிகிச்சை தர வேண்டும்” என்று கூறினார்.
அத்துடன், “J. Jayalalithaa மற்றும் M. G. Ramachandran படங்களை விட தங்களது படங்களை பெரிதாக வைத்தவர்களை பார்த்து மட்டுமே அந்த கட்சி தலைவர் சிரிக்கிறார்” என்றும் அவர் விமர்சித்தார்.
