முரசு புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள ஆந்திராவுக்கு 500 மின்வாரிய ஊழியர்கள்: அமைச்சர் தகவல்
சென்னை: முரசு புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள ஆந்திர மாநிலத்திற்கு உதவும் வகையில், தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக 500 மின்வாரியப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
முரசு புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள ஆந்திர மாநில மின்வாரியம் தமிழகத்தின் உதவியைக் கோரியுள்ளது. இதையடுத்து, தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மின்சாரப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், ஆந்திராவுக்கு உதவிசெய்யும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக 500 மின்வாரியப் பணியாளர்கள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலம் என்ற அடிப்படையில் ஆந்திராவுக்கு உதவி செய்து வருகிறோம். அதே நேரத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழகத்திலும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
