Maharashtra மாநிலத்தின் Raigad district பகுதியில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை உயிரிழந்தவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் Ansh Sameer Sawan (19), Rithesh (22), Jitendra Lokhande (20), Anand Shingte (21), Nikhil (25), Mahesh Anil Pawar (25), Aditya Ashok (21) மற்றும் Rajesh Ashok Gadkar (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மலைப்பாதையில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்திருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், இரவு மற்றும் அதிகாலை நேர பயணங்களில் அதிக கவனம் தேவை என்றும், தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டுவது பெரும் விபத்துகளுக்கு காரணமாகலாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
