பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; ஒரே வாரத்தில் 2வது அதிர்ச்சி
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
இதையடுத்து கடந்த மே 15ஆம் தேதி நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்வு அறிவிக்கப்பட்டது.
போர் சூழல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், எரிபொருள் விலை மீண்டும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் முன்கூட்டியே எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்துள்ளன.
இந்த விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய எரிபொருள் விலை நிலவரம்:
டில்லி:
- பெட்ரோல் (1 லிட்டர்) – ரூ.98.64
- டீசல் (1 லிட்டர்) – ரூ.91.58
சென்னை:
- பெட்ரோல் (1 லிட்டர்) – ரூ.104.49
- டீசல் (1 லிட்டர்) – ரூ.96.11
மும்பை:
- பெட்ரோல் (1 லிட்டர்) – ரூ.107.59
- டீசல் (1 லிட்டர்) – ரூ.94.08
கொல்கத்தா:
- பெட்ரோல் (1 லிட்டர்) – ரூ.109.70
- டீசல் (1 லிட்டர்) – ரூ.96.07
