இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டா பகுதியில் சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் தண்டவாளம் அருகே வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பின் தாக்கத்தால் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலும் சேதமடைந்தது. அருகிலிருந்த வீடுகள் மற்றும் வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகின.
இந்த தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) பொறுப்பேற்றுள்ளது. குவெட்டா கண்டோன்மென்ட் பகுதியில் இருந்து ரயிலில் பயணம் செய்த பாகிஸ்தான் ராணுவத்தினரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலின் காரணமாக ரயில் தடம் புரண்டதுடன், பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
