தமிழக அரசின் 2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
துறை வாரியான முக்கிய நிதி ஒதுக்கீடுகள் பின்வருமாறு:
- ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை – ரூ.47,240 கோடி
- பள்ளிக்கல்வித்துறை – ரூ.44,527 கோடி
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ரூ.39,609 கோடி
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ.29,863 கோடி
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.23,357 கோடி
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – ரூ.21,524 கோடி
- சிறப்பு செயலாக்கத் துறை – ரூ.17,150 கோடி
- மின்சாரம் / எரிசக்தித் துறை – ரூ.15,828 கோடி
- போக்குவரத்துத் துறை – ரூ.13,561 கோடி
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – ரூ.9,818 கோடி
- நீர்வளத் துறை – ரூ.9,264 கோடி
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை – ரூ.8,852 கோடி
- உயர்கல்வித் துறை – ரூ.8,393 கோடி
- கூட்டுறவுத் துறை – ரூ.8,028 கோடி
- கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை – ரூ.4,880 கோடி
- தொழில்துறை – ரூ.4,414 கோடி
- நீதி மற்றும் நிர்வாகத் துறை – ரூ.2,486 கோடி
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) – ரூ.2,142 கோடி
- தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை – ரூ.2,022 கோடி
- கைத்தறி மற்றும் கதர் துறை – ரூ.1,678 கோடி
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – ரூ.1,485 கோடி
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – ரூ.1,051 கோடி
- இந்து சமய அறநிலையத் துறை – ரூ.708 கோடி
- செயற்கை நுண்ணறிவு (AI) துறை – ரூ.398 கோடி
- ஜவுளித் தொழில்துறை – ரூ.60 கோடி
இந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் கல்வி, சுகாதாரம், சமூக நலன், உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
