பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரக்கூடாது; சீனாவுக்கு இந்தியா கண்டனம்
India தலைமையில் நடைபெற உள்ள BRICS மாநாட்டை முன்னிட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Randhir Jaiswal செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, 2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் டெல்லியில் நடத்தவுள்ளதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் S. Jaishankar தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வெளியுறவு அமைச்சர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாகவும், சிலர் ஏற்கனவே டெல்லி வரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்கள் பிரதமர் Narendra Modiயையும் சந்தித்து பேசவுள்ளதாக கூறினார்.
மேலும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூரின் போது China, Pakistanக்கு ஆதரவளித்ததாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆபரேஷன் சிந்தூர் என்பது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான துல்லியமான பதிலடி நடவடிக்கை” என்றார்.
மேலும், “இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் மற்றும் அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது” என்றும் தெரிவித்தார்.
“பொறுப்புள்ள நாடுகள், பயங்கரவாத உள்கட்டமைப்பை ஆதரிப்பதோ அல்லது பாதுகாப்பதோ தங்களின் நற்பெயரையும் மதிப்பையும் பாதிக்கிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்” என்று சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
