டெஹ்ரான்: ஈரானின் புதிய ராணுவ அமைச்சர் பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் மதகுரு ஆட்சியாளர் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.
இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் பிரதமர் அலுவலக கட்டடத்தை குறிவைத்து தாக்கியதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல்கள் இன்னும் தீவிரமாகும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஈரானின் புதிய ராணுவ அமைச்சராக புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த ஜெனரல் சையத் மஜித் எபின் அல்ரசா பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் டெஹ்ரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சையத் மஜித் எபின் அல்ரசா உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், இதுகுறித்து ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக ராணுவ அமைச்சராக இருந்த அமீர் சனிர்சாதே தாக்குதலில் கொல்லப்பட்டதால், அவருக்கு பதிலாக சையத் மஜித் எபின் அல்ரசா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
