திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள பாறையில் பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்த சிவன், விநாயகர் மற்றும் முருகர் விக்ரஹங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக இந்துமுன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தை ஒருவரின் மனநிலை தொடர்பான செயல் என்ற கோணத்தில் மட்டுமே அணுகாமல், அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
