சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆதரவு அளித்த கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு முதல்வர் Vijay நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 144 ஓட்டுகளும், எதிராக 22 ஓட்டுகளும் பதிவானது. மேலும், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதையடுத்து, தவெக அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் JCD Prabhakar அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், “மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கையால் அமைந்த நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த வெற்றிக்குக் காரணமான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். என்றும் நம்முடன் நிற்கும் தவெக சட்டசபை உறுப்பினர்களுக்கும் அன்பை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, “தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
