சென்னை: அரசு அதிகாரிகளை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு தவெக எம்எல்ஏ Kanimozhi Santhosh விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியமைத்ததையடுத்து, அக்கட்சியின் சில எம்எல்ஏக்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்களால் பேசுபொருளாகி வருகின்றனர்.
அந்த வகையில், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், அவர் சோபாவில் அமர்ந்திருந்த நிலையில், அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, “அரசு அதிகாரிகளை வரவழைத்து எம்எல்ஏ ஆலோசனை நடத்தியது ஏன்?” என்ற கேள்வியுடன் பலரும் அந்த புகைப்படங்களை பகிரத் தொடங்கினர்.
மேலும், அதிகாரிகள் அமர்வு முறையையும் சிலர் விமர்சித்தனர். இதனால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவின.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த கனிமொழி சந்தோஷ், கூட்டம் இயல்பான ஆலோசனைக்காக நடத்தப்பட்டது என்றும், அதில் எந்தவித அவமதிப்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள
