உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற லீக் போட்டிகளில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் வெற்றி பெற்று அசத்தின.
‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும் செக் குடியரசு அணிகள் மோதின. முதல் பாதி கோல் இன்றி முடிந்த நிலையில், இரண்டாவது பாதியில் மெக்சிகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்தது. இதன் மூலம் செக் குடியரசை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒரே ஒரு கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் தென் கொரியாவை தென் ஆப்ரிக்கா அணி தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக தென் ஆப்ரிக்கா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளது. குரூப் ‘ஏ’ பிரிவில் அந்த அணி ஒரு வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் அடுத்த சுற்றை எட்டியுள்ளது.
