பிரதமர் Narendra Modi இன்று குஜராத் மாநிலம் மற்றும் டாமனுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு, மொத்தம் ரூ.21,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், போக்குவரத்து, எரிசக்தி, சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2.30 மணியளவில் Surat மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சுமார் ரூ.18,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், Vadodara – மும்பை இடையிலான 8 வழிச்சாலையின் முக்கிய பகுதிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து யூனியன் பிரதேசமான Daman செல்லும் பிரதமர் மோடி, நமோ விமான நிலையத்தின் புதிய முனையத்தையும், நமோ மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்.
அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், ரூ.2,970 கோடி மதிப்பிலான கூடுதல் வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் குஜராத் மற்றும் டாமன் பகுதிகளில் உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
