கனிஷ்கா ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு சம்பவத்தின் 41-வது நினைவு நாளையொட்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.
1985 ஜூன் 23-ஆம் தேதி கனடாவின் டொரான்டோவில் இருந்து மும்பை வழியாக லண்டன் சென்ற ஏர் இந்தியா கனிஷ்கா விமானம், அயர்லாந்து வான்பரப்பில் குண்டுவெடித்து சிதறியது. இந்த கோர தாக்குதலில் 329 பேர் உயிரிழந்தனர். உலகின் மிக மோசமான விமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக இந்த சம்பவம் கருதப்படுகிறது.
இந்த நினைவு நாளில் வெளியிட்ட அறிக்கையில் ஜெய்சங்கர், “இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்கிறோம். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
