United Kingdom, ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் தொடர்பான தடைகளை தற்போது தளர்த்தியுள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Russia, Ukraine மீது 2022ஆம் ஆண்டு போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தன. அதில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், மேற்காசிய நாடான Iran பகுதியில் நிலவி வரும் போர் சூழ்நிலையால் முக்கிய கடல் வர்த்தக பாதையான Strait of Hormuz ஜலசந்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தன் நாட்டின் எரிசக்தி தேவையை சமாளிக்கும் வகையில் ரஷ்யா மீதான எண்ணெய் தடையை பிரிட்டன் தளர்த்தியுள்ளது.
இதற்கு முன்பாகவே United States அரசும் ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளை தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
