Indian Premier League 2026 சீசனில், முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெறாத நிலையில், Sunrisers Hyderabad அந்த தடையை உடைத்து முதல் அணியாக வெற்றி பெற்றுள்ளது.
Kolkata Knight Riders அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது.
அணியின் சார்பில் Heinrich Klaasen 52 ரன்கள், Abhishek Sharma 48 ரன்கள், Travis Head 46 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் Angkrish Raghuvanshi அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.
இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற முதல் 5 போட்டிகளில், முதலில் பந்துவீச்சு செய்த அணிகளே வெற்றி பெற்றிருந்தன. ஆனால், இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அதனை மாற்றி, முதலில் பேட்டிங் செய்த அணியாக வெற்றி பெற்றது.
மேலும், அணியின் புதிய கேப்டனாக உள்ள Ishan Kishan தலைமையில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்த போட்டிகளில் Royal Challengers Bengaluru, Mumbai Indians, Rajasthan Royals, Punjab Kings மற்றும் Delhi Capitals அணிகள் வெற்றி பெற்றிருந்தன.
