“என் மீதான குற்றச்சாட்டுகளை தவெக அரசால் நிரூபிக்க முடியாது” – முன்னாள் அமைச்சர் மகேஷ்
சென்னை: தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தமிழக வெற்றிக் கழக அரசு நிரூபிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக ஏற்கெனவே தன்னிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்காக அரசு தரப்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறினார். அந்தக் கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அரசு நிரூபிக்க முடியாது என்று தெரிவித்த மகேஷ், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் தன்னைக் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
